இளங்காடு கண்ணன் கோயிலில் அவதார விழா

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டில் கண்ணன் கோயிலில் கண்ணன் அவதார விழா நேற்று முன்தினம் (12ம் தேதி) மாலை துவங்கியது. அப்போது வடக்கிப்பட்டி ஆண்டாள் கோலாட்ட குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கோபூஜை, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சுவாமி சந்தான கோபால கிருஷ்ணன் தொட்டில் சேவையில் அருள்பாலித்தார். மாலையில் உற்சவர் வீதியுலா நடந்தது. இரவில் வையாழி சேவை, உறியடித்தல், சாற்றுமுறை நடந்தது. விழாவில் ராஜமன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் பங்கேற்று ஆசி வழங்கினார். இதில் திரளான ...

Share This: