பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: உலக லெவன் அணி த்ரில் வெற்றி

லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் த்ரில் வெற்றியை பெற்றது. லாகூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 45 ரன்களும், அகமது ஷெஹ்சாத் 43 ரன்களும் சேர்த்தனர்.  175 ரன்களை இலக்காக கொண்டு பின்னர் களமிறங்கிய உலக லெவன் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்திருந்தது. இருப்பினும் பின்னர் இணைந்த பெரேரா, அம்லா ஜோடி அதிரடியாக ஆடி வெற்றியை உறுதி செய்தது. இருவரது அதிரடி ஆட்டத்தால் ஒரு பந்து எஞ்சி யிருந்த நிலையிலேயே இலக்கை எட்டிய உலக லெவன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அம்லா 72 ரன்களுடனும், பெரேரா 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது போட்டி நாளை பெறுகிறது.

Share This: