மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி

கோலாலம்பூர் : மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மதரஸா பள்ளியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். கோலாலம்பூரில் உள்ள டார்ல் குர்ஆன் இட்டிபா கியாக் என்ற    பள்ளியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள் மற்றும்  2 ஊழியர்கள் உயிரிழந்தனர்.இன்று அதிகாலை 5.40 மணி அளவில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This: