தினகரன்- ஓபிஎஸ் அணி இடையே கைகலப்பு: பெரியகுளத்தில் பதற்றம்

பெரியகுளம்: பெரியகுளத்தில் தினகரன் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம், பெரியகுளம் முன்றாந்தல் காந்தி சிலை அருகே டி.டி.வி.தினகரன் அணியினர், நேற்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த ஓ.பி.எஸ். அணியினருக்கும், தினகரன் அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகுளம் போலீசார் வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். தொடர்ந்து மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதையடுத்து, தினகரன் அணியை சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். பெரியகுளம் நகரில் பதற்றம் நிலவுவதால் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share This: