எம்ஜிஆர் நாணயம் வெளியீடு பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்னை: எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு நாணயங்களை வெளியிடுவதற்கு மத்திய  அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: மறைந்த  முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு  முழுவதும் கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டத்தின்போது, சிறந்த தலைவராக  விளங்கிய எம்ஜிஆரின் நினைவு நாணையத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு 5  ரூபாய் மற்றும் 100 ரூபாய் நினைவு நாணயங்களை வெளியிடுவதற்கான அரசிதழை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. எம்ஜிஆரின் நினைவாக இந்த நினைவு  நாணயங்களை வெளியிடுவதற்கான உத்தரவை பிறப்பித்ததற்காக எனது சார்பிலும்,  தமிழக மக்களின் சார்பிலும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This: