ஞாயிறு, 24 செப்டம்பர் 2017
சேலம் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் இருந்து நடிகையின் படம் நீக்கம்

Published on : 2017-09-14 00:58:00 |Added on : 2017-09-13 15:18:19 | 1 views


ஓமலூர்: ஓமலூர் அருகே ஒரு பெண்ணின் ரேஷன் கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம் இடம் பெற்றது. காஜல் படத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட பெண்ணின் படத்தை அதிகாரிகள் ஒட்டினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமம் ஆர்சி செட்டிப்பட்டி கோமாளி வட்டம் என்னும் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி சரோஜாவுக்கு கடந்த 11ம் தேதி ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில், அவரது புகைப்படத்துக்கு பதில்  நடிகை காஜல் அகர்வாலின் படம் இருந்தது. இதுகுறித்த செய்தி, நாளிதழ்களில் நேற்று வெளியானது. இதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் நேற்று, சரோஜாவுக்கு வழங்கப்பட்டு ஸ்மார்ட் கார்டினை வாங்கி விசாரித்தார். பின்னர், அந்த கார்டை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மையத்தில் கொடுத்து நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மறைக்கப்பட்டு, அதற்கு மேல் தற்காலிகமாக சரோஜாவின் புகைப்படத்தை அச்சிட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க »advertising

Copyright © 2008 - 2017 tamilsites.com  - all rights reserved