770 மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்தானது விவகாரம்: முதல்வர் நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி : 770 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடத்தை நிரப்புவதில் அரசிற்கு எவ்வித தொடர்பும் இல்லை. நிர்வாக ஒதுக்கீட்டின் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை பற்றி மருத்துவ நிர்வாகம் தான் கூற வேண்டும். மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களின் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது என முதல்வர் நாராயணசாமி  விளக்கமளித்துள்ளார்

Share This: