காணிப்பாக்கத்தில் 17வது நாள் பிரமோற்சவம் : காமதேனு வாகனத்தில் விநாயகர் வீதி உலா

சித்தூர்: காணிப்பாக்கம் கோயில் பிரமோற்சவத்தின் 17வது நாளில் காமதேனு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்தூர் அடுத்த காணிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. நாளையுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.பிரமோற்சவத்தின் 16வது நாளான நேற்றுமுன்தினம் கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ...

Share This: