காளிப்பட்டி கந்தசாமி கோயில் கும்பாபிஷேகம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற புனித நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் மீது  புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது.கும்பாபிஷேக  விழாவில் திமுக முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம், காளிப்பட்டி கந்தசாமி   கோயில் அறங்காவலர் ...

Share This: