சனி, 23 செப்டம்பர் 2017
குரங்கு எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தின் காப்புரிமை பிரச்சனைக்கு தீர்வு கிட்டியது

Published on : 2017-09-13 11:44:00 |Added on : 2017-09-13 03:18:25 | 1 views


ஜகார்த்தா: குரங்கு செல்ஃபி புகைப்படம் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2011ம்  ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கு ஒன்றின் செல்பி புகைப்படம் உலகளவில் மிகப்பிரபலமானது. டேவிட் ஸ்லேட்டர் கேமராவால் எடுத்த அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படம் பல கோடி நபர்களால் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டது. டேவிட் ஸ்லேட்டர் ஒரு அசைன்மென்ட் தொடர்பாக அங்கு சென்றிருந்தபோது, நருட்டோ என்ற அந்தக் குரங்கு அவரது கேமராவில் தன்னைத்தானே செல்பி எடுத்துக்கொண்டது. பிரபலமான அந்த செல்பி புகைப்படத்தை விக்கிப்பீடியா தனது பொதுத்தளத்தில் வெளியிட்டது. தன்னுடைய அனுமதியில்லாமல் தனக்குச் சொந்தமான புகைப்படத்தை பொதுவெளியில் விக்கிப்பீடியா வெளியிட்டது தவறு என்றும், அதனால் அப்படத்தை நீக்க வேண்டும் என்றும் டேவிட் வலியுறுத்தியிருந்தார். ஆனால் விக்கிப்பீடியாவோ, ஸ்லேட்டரின் கேமராவைப் பறித்துக்கொண்ட நருட்டோ என்ற மக்காக் இன குரங்கு, தன்னை தானே செல்ஃபி எடுத்துக்கொண்டது, அதனால் டேவிட்டுக்கு அதன் காப்புரிமை சாராது என்று தெரிவித்துவிட்டது. இதனிடையே புகைப்படத்தின் மூலம்,  குரங்கும் பயனடைய வேண்டும் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா, குரங்கு சார்பாக நீதிமன்றத்தையும் நாடியது. இந்நிலையில் வருங்காலத்தில் இந்தப் புகைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை குரங்குகள் நல அமைப்புகளுக்கு அளிப்பதாக புகைப்பட கலைஞர் டேவிட் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »advertising

Copyright © 2008 - 2017 tamilsites.com  - all rights reserved